TNPSC குரூப் 4 வினாத்தாள் 2024 – பொதுத்தமிழ் (தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு)

தேர்வு நாள்
09.06.2024
வினாத்தாள் குறியீடு
CCSE4GT/2024 – வினாத்தாள் வரிசை A (Version A)
வினாக்கள்
100

இதுவரை 100 இல் 3 வினாக்கள் சரிபார்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. மற்றவை விரைவில்.

விடைகள் TNPSC வெளியிட்ட இறுதி விடைக்குறிப்பின்படி: விடைக்குறிப்பு · அதிகாரப்பூர்வ வினாத்தாள்

(E) விடை தெரியவில்லை

இவ்வினாத்தாளில் ஒவ்வொரு வினாவுக்கும் (A) முதல் (D) வரையிலான நான்கு விடைகளோடு ஐந்தாவதாக “(E) விடை தெரியவில்லை” என்ற தேர்வும் இருந்தது. வினாத்தொகுப்பின் முகப்பு அறிவுரைகளின்படி, (A)–(D) இல் சரியான ஒன்றைக் குறிக்க வேண்டும்; விடை தெரியாவிட்டால் (E) ஐக் குறிக்க வேண்டும். எந்த வினாவுக்கும் ஒரே ஒரு விடையை மட்டுமே குறிக்க வேண்டும். (E) எந்த வினாவுக்கும் சரியான விடை அல்ல; கீழே ஒவ்வொரு வினாவின் கீழும் அது மீண்டும் காட்டப்படவில்லை.

இவ்வினாக்கள் எந்த அலகைச் சேர்ந்தவை என்பதைப் பொதுத்தமிழ் முழுப் பாடத்திட்டம் பக்கத்தில் பார்க்கலாம். எழுதிப் பார்க்க: இலவசப் பொதுத்தமிழ் பயிற்சித் தேர்வுகள்.

  1. 1. ‘வா’ என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று

    1. (A)வந்தாள்
    2. (B)வந்த
    3. (C)வந்து
    4. (D)வந்தவர்
    விடை

    சரியான விடை: (A) வந்தாள்

    விளக்கம் காண்க ›
  2. 2. இராமன் வந்தான் – எவ்வகைத் தொடர் என அறிந்து எழுது.

    1. (A)வினைமுற்றுத் தொடர்
    2. (B)எழுவாய்த் தொடர்
    3. (C)பெயரெச்சத் தொடர்
    4. (D)வினையெச்சத் தொடர்
    விடை

    சரியான விடை: (B) எழுவாய்த் தொடர்

    விளக்கம் காண்க ›
  3. 3. ஓர் அடியுள் முதல், மூன்று, நாலாம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ———— எதுகை ஆகும்.

    1. (A)கூழை எதுகை
    2. (B)கீழ்க்கதுவாய் எதுகை
    3. (C)ஒரூஉ எதுகை
    4. (D)மேற்கதுவாய் எதுகை
    விடை

    சரியான விடை: (D) மேற்கதுவாய் எதுகை

    விளக்கம் காண்க ›

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 28.11.2026